கதர் சிறப்பங்காடி மாகியில் திறப்பு
கதர் சிறப்பங்காடி மாகியில் திறப்பு
கதர் சிறப்பங்காடி மாகியில் திறப்பு
ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகியில் கதர் சிறப்பங்காடி திறப்பு விழா நடந்தது.
பிரசித்திப் பெற்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாகியில் உள்ள நகராட்சி மைதானத்தில், 'கதர் மேளா-2011' என்ற கதர் சிறப்பங்காடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பங்காடியை, வல்சராஜ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழாவில், முன்னாள் துணை சபாநாயகர் ஸ்ரீதரன், கதர் வாரிய முதன்மை செயல் அதிகாரி தினேஷ்குமார், மாகி மண்டல அதிகாரி (பொறுப்பு) பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


