ADDED : ஆக 30, 2011 11:30 PM
புதுச்சேரி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி வாசல்களில் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பெரியக்கடை பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அபூசாலிஹ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதுச்சேரி காசிம் சாலை முவஹ்ஹிதியா பள்ளி வாசலில் காலை 8 மணிக்கும், தட்சணாமூர்த்தி நகர் மஸ்ஜிதே அல்ஹமீதியா பள்ளிவாசலில் 8.30 மணிக்கு தொழுகை நடக்கிறது. பெரியக்கடை மஸ்ஜிதே இஸ்லாமியா பள்ளிவாசல், முதலியார்பேட்டை நூறடி சாலை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல், மேட்டுப்பாளையம், கபருஸ்தான் பள்ளி, தெபேசம்பேட்டை கோட்டக்குப்பம், மூலக்குளம் ஜே.ஜே. நகர், தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, ஒதியம்பட்டு, புது பஸ் நிலையம், அரியாங்குப்பம் இந்திரா நகர், தவளக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணிக்கு தொழுகை நடக்கும்.புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதி, சந்தா சாகிப் தெரு, புதுசாரம் பாலாஜி நகர் பள்ளி வாசல்களில் காலை 9.15 மணிக்கும், கோவிந்தசாலை, லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு, கிருமாம்பாக்கம், அரியாங்குப்பம், வாணரப்பேட்டை பள்ளிவாசல்களில் 9.30 மணிக்கு தொழுகை நடக்கிறது.நெல்லித்தோப்பு பள்ளிவாசல்களில் காலை 9.45 மணிக்கும், முல்லா வீதி, நைனார்மண்டபம் பள்ளிவாசல்களில் 10 மணிக்கும், சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி பள்ளிவாசலில் 10.30 மணிக்கும் தொழுகை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


