ADDED : அக் 01, 2011 12:28 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் கிணற்றில் கிடந்த தேங்காயை எடுப்பதற்கு முயன்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.சின்னசேலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தன், 60 .
இவர் நேற்று முன்தினம் மாலை அம்சாகுளத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இறங்கினார்.கிணற்றில் விழுந்து கிடந்த தேங்காயை எடுப்பதற்கு இறங்கிய அவர் பாதி கிணற்றில் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் இறந்து கிடந்த கந்தனின் உடலை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.