/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சிதி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
தி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
தி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
தி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 30, 2011 12:24 AM
ஓசூர்: ஓசூர் நகராட்சி தி.மு.க., வேட்பாளரை கண்டித்து பெண் உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க., வில் 'சிட்டிங்'
நகராட்சி தலைவர் (பொ) மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். நேற்று வேட்பாளர்
மாதேஸ்வரன், கட்சியினருடன் தாசில்தார் அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள
அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது தாசில்தார் அலுவலகம் எதிரே
மாதேஸ்வரனை கண்டித்து கோஷமிட்டப்படி ஒரு பெண் திடீரென்று கூட்டத்தில்
இருந்து ஓடி வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். தீ வைப்பதற்குள் போலீஸார்
மடக்கி பிடித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால்,
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விசரணையில், தீக்குளிக்க
முயன்ற பெண், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த முருகன் மனைவி ஈஸ்வரி(36)
என்பது தெரியவந்தது. கடந்த 15 ஆண்டுக்கு முன் ராயக்கோட்டை சாலையில்
சென்னத்தூர் பஞ்சாயத்தில் ஈஸ்வரி குடும்பத்தினர் தங்களுடைய 14 சென்ட்
நிலத்தை மாதேஸ்வரனிடம் விற்க சொல்லி ஆவனங்களை ஒப்படைத்துள்ளனர். அந்த
நிலத்தை இதுவரை விற்று கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், போலீஸார்,
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் செய்தும் நடவடிக்கை
எடுக்கவில்லை, அதனால், சாவேதே மேல் என தீக்குளிக்க முயன்றதாக தீக்குளிக்க
முயன்ற பெண் ஈஸ்வரி போலீஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்தார். போலீஸார், அந்த
பெண்ணை எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில் தி.மு.க., வில் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு எதிரான
அதிருப்தியாளர்கள், தேர்தலில் அவருக்கு எதிராக கெட்டபெயரை ஏற்படுத்த
சம்பந்தப்பட்ட பெண்ணை தூண்டிவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


