ADDED : ஜூலை 27, 2011 10:40 PM
பெரியகுளம் : கிராம ஊராட்சி குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மாநாடு பெரியகுளத்தில் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில இணைப்பு குழு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். லாசர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கவுன்சிலர் அப்துல்ரஜாக், தாலுகா செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் மன்னர்மன்னன், துப்புரவு தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் மூசா, பொதுசெயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்கள், துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.