ADDED : செப் 25, 2011 10:08 PM
வால்பாறை : ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆதிவாசி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வால்பாறை டவுன் காமராஜ்நகரில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆதிவாசி மாணவர்களுக்கான உண்டு, உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சங்கரன்குடி, பரமன்கடவு, நெடுங்குன்று, கருமுட்டி, கவர்க்கல் உள்ளிட்ட பல்வேறு செட்டில் மெண்ட் பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவமனைக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வரும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எந்த நோய்க்கு எந்த வகை மருந்து வழங்கப்படவேண்டும், நோய் வரும் முன் நம்மை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் டாக்டர்கள் சிவராமகிருஷ்ணன், பொன்மலர் ஆகியோர் செயல்விளக்கம் காண்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுநர் செந்தில்குமார், பள்ளி காப்பாளர் ரகுபதி ஆகியோர் செய்திருந்தனர்.