/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம்சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம்
சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம்
சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம்
சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம்
ADDED : ஆக 17, 2011 03:41 AM
ள்ளக்குறிச்சி : சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவசியம் என்று மாணவிகளுக்கு சி.இ.ஓ., குப்புசாமி அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் அறிவியல் கண்காட்சியை துவங்கியது.
இதனை துவக்கி வைத்து சி.இ.ஓ., குப்புசாமி பார்வையிட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் குபேந்திரன், துணை தலைவர் அப்துல்கரீம், இணை செயலாளர்கள் வேணு, சதாசிவம், ஆண்கள் பள்ளி-பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சி.இ.ஓ., குப்புசாமி பேசியதவாது :
உலகில் முதன்மை, சிறந்த கண்டுபிடிப்பு மனிதர்கள் ஆவர். இறைவன் மனிதனை படைத்தான், மனிதன் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை படைத்தான். முயற்சி, உழைப்பு உலகியல் தத்துவம். முயற்சி செய்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.
சமூக முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் அவசியம். அதற்காக தான் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சிகள் குறித்து உங்களது பெற்றோர், உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் கூற வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆர்வம் இருந்தால் புதிய சிந்தனைகள், கருத்துகள், எண்ணங்கள், கண்டுபிடிப்புகள் வரும். புதிய கண்டுபிடிப்புகள் வந்தால் சமூகம் முன்னேற்றம் அடையும். எனவே பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு சி.இ.ஓ., குப்புசாமி பேசினார்.


