லாரி ஸ்டிரைக்: ரேஷன் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய உத்தரவு
லாரி ஸ்டிரைக்: ரேஷன் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய உத்தரவு
லாரி ஸ்டிரைக்: ரேஷன் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய உத்தரவு
ADDED : ஆக 17, 2011 12:27 AM
விருதுநகர் : லாரி ஸ்டிரைக் காரணமாக ரேஷன் பொருட்களை இன்றுக்குள் அனைத்து கடைகளுக்கும் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய அளவில் ஆக.,18 நள்ளிரவு முதல் சுங்கவரி குறைப்பு, உதிரி பொருட்கள் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதனால், ரேஷன் பொருட்கள் சப்ளை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றுக்குள் (ஆக. 17) நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து அரிசி, சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய், உட்பட அனைத்து பொருள்களையும் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்து முடிக்க வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' எப்போதும்மாதத்தில் 25 ம் தேதி முதல், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள்அனுப்பும் பணி துவங்கும். தற்போது 22 ம் தேதி முதலே அடுத்த மாதத்திற்கான பொருட்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 95 சதவீத பொருட்கள் அனுப்பப்பட்டு விட்டன. ஆக., 17 க்குள் அனைத்து கடைகளுக்கும் தேவையான பொருட்கள் அனுப்பி முடிக்கப்பட்டு விடும். லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால், அடுத்த மாதத்திற்கான சப்ளை பாதிக்கும் நிலை ஏற்படும்,'' என்றார்.