ADDED : செப் 06, 2011 01:39 AM
மதுரை : மதுரையை சேர்ந்த ஆடிட்டர் அமர்நாத் புகார்படி, தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி, நகர துணை செயலாளர் உதயகுமார் மீது போலீசார் நில அபகரிப்பு வழக்குப்பதிந்தனர்.
இருவரும் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது. இதன்படி, இருவரும் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி (பொறுப்பு) முன் சரணடைந்து ஜாமினில் சென்றனர்.


