/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமங்களுக்குள் மோதல்பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமங்களுக்குள் மோதல்
பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமங்களுக்குள் மோதல்
பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமங்களுக்குள் மோதல்
பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமங்களுக்குள் மோதல்
ADDED : ஆக 11, 2011 04:10 AM
பரங்கிப்பேட்டை:சிதம்பரம் அருகே இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட
மோதலில் வீடுகள், கடைகள், ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து
நொறுக்கப்பட்டன.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுப்பேட்டை மீனவ
கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி. இவர்கள்
இருவரும் நேற்று மாலை சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டைக்குச் செல்லும்
அரசு பஸ்சில் சென்றனர்.பரங்கிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது
சாமியார்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு மோட்டாரை
எடுத்துக் கொண்டு ஏறினர்.
அப்போது கோவிந்தராஜ், மோட்டாரில் உள்ள கிரீஸ்
மேலே ஒட்டிக்கொள்ளப் போகிறது என நகர்ந்து நிற்கும்படி கூறினார். இதனால்
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.புதுப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற
போது, கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி இருவரும் சாமியார்பேட்டையைச்
சேர்ந்தவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கித் தாக்கினர்.
சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்குச் சென்று நடந்த
சம்பவத்தைக் கூறினர். ஆத்திரமடைந்த சாமியார்பேட்டை கிராமத்தினர் 200க்கும்
மேற்பட்டோர் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் புதுப்பேட்டை
கிராமத்திற்குள் புகுந்து வீடுகள், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், அங்கிருந்தவர்களைக் கத்தியால் வெட்டி விட்டு சென்றனர்.இந்தத்
தாக்குதலில் புதுப்பேட்டை அரசு துணை சுகாதார நிலையம், 8 வீடுகள், 2 கடைகள்,
எஸ்.டி.டி., பூத், கேபிள் 'டிவி', டிஷ், சுமோ கார் கண்ணாடி, பைக்
உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. அமிர்தவல்லி, பரசுராமன், அக்னிராமன் ஆகிய மூன்று
பேருக்கு கத்திவெட்டு காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர்.இந்த தகவல் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுப்பேட்டையைச்
சேர்ந்தவர்களுக்கு தெரியவந்ததும். அனைவரும் கரைக்குத் திரும்பினர்.
சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. உடன் பஸ்
போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தகவலறிந்த எஸ்.பி., பகலவன் சம்பவ
இடத்திற்குச் சென்று சேதப்படுத்தப்பட்ட வீடுகள், கடைகளைப்
பார்வையிட்டார்.இரு கிராமத்தினரும் மீண்டும் மோதிக்கொள்ளாத வகையில்
டி.எஸ்.பி., நடராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.