/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாநகராட்சியில் உடனுக்குடன் நலத்திட்டங்கள் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் உறுதிமாநகராட்சியில் உடனுக்குடன் நலத்திட்டங்கள் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் உறுதி
மாநகராட்சியில் உடனுக்குடன் நலத்திட்டங்கள் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் உறுதி
மாநகராட்சியில் உடனுக்குடன் நலத்திட்டங்கள் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் உறுதி
மாநகராட்சியில் உடனுக்குடன் நலத்திட்டங்கள் நெல்லை அதிமுக மேயர் வேட்பாளர் உறுதி
ADDED : செப் 17, 2011 02:50 AM
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என்று அதிமுக மேயர் வேட்பாளர் விஜிலா சத்தியானந்த் கூறினார்.நெல்லை மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளராக கிறிஸ்தவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்த விஜிலா சத்தியானந்த் (40) அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.எஸ்சி, பி.எட், பி.ஜி.டி.சி.ஏ படித்த இவர் 2006ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி துணை செயலாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான இலவச கம்ப்யூட்டர், தையல் மற்றும் யோகா பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார்.சி.எஸ்.ஐ சினாட், நெல்லை சி.எஸ்.ஐ டயோசீசன், டில்லி கம்யூனியன் ஆப் சர்ச்சஸ் இன் இன்டியா, சிறு மற்றும் குறுந் தொழில் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் நிர்வாக குழு உறுப்பினராகவும், கவுன்சில் ஆப் வேர்ல்டு மிஷன் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். விஜிலா சத்தியானந்த் கடந்த மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இவர் பாளையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நெல்லை சி.எஸ்.ஐ டயோசீசனில் கவுன்சிலராக போட்டியிட்ட வெற்றி பெற்றுள்ளார். பாளை மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளராகவும் பணியாற்றி வருகிறார். 2004ம் ஆண்டிற்கான சிறந்த பெண் தொழில் முனைவோர் பட்டத்தை பெற்றுள்ளார்.விஜிலா சத்தியானந்த் கணவர் சத்தியானந்த் சீனிவாசகம் மேலப்பாளையம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பாளை பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஜானகி ரத்னா ஷேரன் என்ற மகள் உள்ளார்.மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜிலா சத்யானந்த் கூறியதாவது:நெல்லை மாநகராட்சி அதிமுக வேட்பாளராக என்னை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.குறிப்பாக, மாநகராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. இதனை தீர்க்க முதல்வரின் அனுமதியின் பேரில் நடவடிக்கை எடுப்பேன். பெரிய நகரங்களுக்கு இணையாக நெல்லை மாநகராட்சியை மாற்றுவேன். முதல்வர் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பாடுபடுவேன்.இவ்வாறு விஜிலா சத்யானந்த் கூறினார்.