ADDED : செப் 07, 2011 10:28 PM
செஞ்சி:செஞ்சி தாலுகா சோ. குப்பத்தில் ஸ்ரீராதா ருக்மணி சமேத வேணுகோபால
சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள் நடந்தன.செஞ்சி தாலுகா சோ. குப் பம்
கிராமத்தில் ஸ்ரீராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் மகா
கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை
யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை,
கலாகர்ஷணம், கும்ப ஆராதனம், முதல் வேளை பூர்ணாஹூதி நடந்தது.
இன்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம், கோ பூஜை. சுப்ரபாதம் புண்யாவாசனம்,
அக்னிபிரணயனம், கும்ப ஆராதனம், மூர்த்தி ஹோமம் ததுக்த ஹோமமும் நடக்கிறது.
காலை 8.30 மணிக்கு கன்யாலக்கினத்தில் மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானம்
கும்பங்கள் புறப்பாடு மற்றும் விமான கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு சாமி
வீதியுலா நடக்கிறது.