/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் மரக்கன்று நடும் விழாகிருஷ்ணகிரியில் மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரியில் மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரியில் மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 24, 2011 12:57 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கொங்கரசன் தலைமை வகித்தார். சாமுண்டீஸ்வரி வரவேற்றார். டி.ஆர்.ஓ., பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பள்ளி வளாகத்தில் நாகமரம், அத்திமரம், சப்போட்டா மரம், புங்கை மரம், வில்வம் மரம், பாதாம் மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி மாணவ மாணவிகள் நட்டு வைத்தனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சின்னையன், சம்பத்குமார், பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


