/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கள்ளக்காதலியுடன் உல்லாசம் : பணகுடி அருகே ஏட்டு கைதுகள்ளக்காதலியுடன் உல்லாசம் : பணகுடி அருகே ஏட்டு கைது
கள்ளக்காதலியுடன் உல்லாசம் : பணகுடி அருகே ஏட்டு கைது
கள்ளக்காதலியுடன் உல்லாசம் : பணகுடி அருகே ஏட்டு கைது
கள்ளக்காதலியுடன் உல்லாசம் : பணகுடி அருகே ஏட்டு கைது
ADDED : செப் 06, 2011 01:03 AM
பணகுடி : பணகுடி அருகே கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டு மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள் (33). இவர் தனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை பயன்படுத்தி வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் சில லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் பணம் வாங்கிய யாருக்கும் இசக்கியம்மாள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணகுடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து பாளை., சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த இசக்கியம்மாள் பணகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட வந்து செல்ல வரும்போது அங்கு பணியாற்றிய ஏட்டு கண்ணனுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து ஏட்டு கண்ணனும், இசக்கியம்மாளும் அடிக்கடி தனிமையில் இருந்து உல்லாசமாக இருந்துள்ளனர். தற்போது ஏட்டு கண்ணன் சங்கரன்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவரது கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அவரது மனைவி கற்பகம் மற்றும் மகள்கள் ரேணுகாதேவி, அனுசுயா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று வடக்கன்குளத்தில் இசக்கியம்மாள் வீட்டில் தங்கியிருந்த ஏட்டு கண்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பணகுடி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.