முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்
முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்
முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 21, 2011 12:53 AM
உடுமலை : இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மாற்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுப்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி விஜயமோகன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:இலவச விவசாய மின் இணைப்புக்காக கடந்த 1991ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அதிகளவு உள்ளனர்.ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் இலவச மின் இணைப்பு வழங்க பல்வேறு நடைமுறைகள் மாற்றப்படுவதால் பல ஆண்டுகளாக இணைப்பு கிடைக்காமல் சிறு, குறு விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில் 1991ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு பயன் கிடைக்கவில்லை. ஏற்கனவே இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கே மீண்டும் இணைப்பு கிடைத்தது.ஒரு கம்பம் மற்றும் கம்பம் இல்லா மின் இணைப்புகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு 2000ம் ஆண்டு பதிவு செய்தவர்கள் கூட புதிய மின் இணைப்பு பெற்ற நிலையில் 1991ம் ஆண்டு முதல் காத்திருப்பவர்கள் தொடர்ந்து காத்திருப்பவர்கள் பட்டியலிலேயே காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.முதலில் பதிவு செய்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இலவச மின் இணைப்பு கிடைக்காததால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரிய அலுவலகத்திற்கு விவசாயிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.எனவே அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல ஆண்டுகளாக இணைப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


