ADDED : ஆக 19, 2011 10:43 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரையை சேர்ந்த சக்தி
பொண்ணு (33) விற்கும், அதே ஊரை சேர்ந்த தவசி (36) க்கும் 13 வருடங்களுக்கு
முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம்
பணம் கொடுத்துள்ளனர். வரதட்சணை கேட்டு கணவரின் அண்ணன் முனியசாமி, தம்பி
குமரையா, சேலையை பிடித்து இழுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும்,
கணவர் உடந்தையாக இருப்பதாக சக்தி பொண்ணு அருப்புக்கோட்டை மகளிர் போலீசில்
புகார் செய்தார். போலீசார் தவசியை கைது செய்து விசாரிக்கின்றனர்.