ADDED : செப் 26, 2011 11:45 PM
தர்மபுரி : பாலக்கோடு அருகே ஹோட்டல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. பாலக்கோடு - தர்மபுரி கூட்டுரோட்டில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் பரசுராமன். நேற்று, இவரது கடையில் உணவு தயார் செய்யும்போது, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால், தீ பிடித்தது. இதனால், கடையில் சாப்பிட்டவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடையில் இருந்த சமையல் கூடம் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.