Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ADDED : செப் 01, 2011 01:56 AM


Google News

தஞ்சாவூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.

மாவட்ட செயலாளர் முல்லைவனம் தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பணியாளர்கள் இடமாறுதல் செய்யபட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட செயலாளர் முல்லைவனம் ஊரக வளர்ச்சி மாவட்ட அலுவலர்களிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு இந்த பணி மாறுதல் விதிமுறைக்கு மாறானது. அதை ரத்து செய்ய வேண்டும் என கேட்டார். அப்போது, மாவட்ட அதிகாரி முல்லைவனத்திடம் ஏக வசனத்தில் திட்டியுள்ளார்.

அதன்பின் அவர் நேரில் சென்று கேட்ட போது தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். அந்த அதிகாரி தஞ்சை கிழக்கு போலீஸில் 'முல்லைவனம் தன்னை தாக்கியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்' கொடுத்த புகாரின் பேரில் முல்லைவனத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இது பொய்யாக போடப்பட்ட வழக்கு. இதை கண்டித்து தஞ்சை மாவட்டம் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து பொதுக்குழு நடக்கிறது. இதற்கு உடனடியாக சுமூக தீர்வு காணாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.

மாநில செயலாளர் புஷ்பநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கமணி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us