அமெரிக்க அதிபர் தேர்தலில் சாரா பாலின் பங்கேற்கவில்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் சாரா பாலின் பங்கேற்கவில்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் சாரா பாலின் பங்கேற்கவில்லை
ADDED : அக் 07, 2011 12:05 AM

வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, குடியரசு கட்சியைச் சேர்ந்த சாரா பாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், 2008ல் நடந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் துணை அதிபருக்கான வேட்பாளராக நின்றவர் சாரா பாலின். இதற்காக, அலாஸ்கா கவர்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் அவர் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என, அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'குடும்பம் தான் எனக்கு முக்கியம்' என, சாராபாலின் தற்போது தெரிவித்துள்ளார். 47 வயதாகும் சாரா பாலினுக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர். சாராபாலின், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளதால், மாசாசூசெட்ஸ் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி, டெக்சாஸ் கவர்னர் ரிக்கி பெர்ரி ஆகியோர், ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.


