Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : ஆக 31, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

கடித்துக் குதறிய எலி...

சிறையில் புலம்பும் தி.மு.க., பிரமுகர்!



''இப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் கோஷ்டிப் பூசல் வெடிச்சிருச்சுங்க...!'' என, விவாதத்தை துவக்கினார் அந்தோணிசாமி.''மேல சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னை, அடையாறுல உள்ள ஒரு மசூதியில, தே.மு.தி.க., சார்புல, இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... இதுல, விஜயகாந்த் கலந்துப்பாருன்னும் அறிவிச்சாங்க... ஆனா, கடைசி நேரத்துல, கட்சியில கோஷ்டிப்பூசல் வெடிச்சிருச்சுங்க... 'இப்தார் விருந்துல விஜயகாந்த் கலந்துகிட்டா, கறுப்புக்கொடி காட்டுவோம்'னு, ஒரு குரூப் அறிவிச்சது...



''இதை கேள்விப்பட்டு, நிகழ்ச்சியை விஜயகாந்த் ரத்து செஞ்சுட்டாருங்க... கடைசியில, கட்சித் தலைமை அலுவலகத்துல தான் விருந்து நடந்தது...'' என, விளக்கினார் அந்தோணிசாமி.

''பிறந்த நாள் அதுவுமா, கட்சித் தலைவர் ஒருத்தர் படாதபாடு பட்டுருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''இதுவும் தே.மு.தி.க., மேட்டராவே...'' என, விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''ஆமாம் பா... பிறந்த நாளை, 'மிட் நைட்ல' மகன்களுடன் கேக் வெட்டி கொண்டாடணும்னு, தலைவர் ரொம்ப ஆசையா இருந்தாரு... மகன்கள் ரெண்டு பேரும், அன்னைக்கு ராத்திரி கோவையில இருந்து ரயில்ல சென்னை வந்துட்டு இருந்தாங்க... மகன்களின் நண்பர்களோட, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு விஜயகாந்த் போயிருக்காரு...



''ஆனா, 'சிக்னல்' கிடைக்காததால, ரயில் ரொம்ப நேரம் பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன்லயே நின்னுடுச்சு பா... வெறுத்துப்போன மகன்கள், அங்கேயே இறங்கிட்டாங்களாம்... கொட்டுற மழையில விஜயகாந்த் அங்க போனப்ப, கார் நின்னு போச்சு... கடைசியில, வேற காரை வரவழைச்சு, வீட்டுக்குப் போயிருக்கார்... பெரிய போராட்டத்துக்கு அப்பறம், தாமதமா வீடு போய் சேர்ந்ததால, பிறந்தநாளை குறித்த நேரத்துல கொண்டாட முடியலையாம் பா...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அன்வர்பாய்.



''பாளையங்கோட்டை சிறையில பாம்பு, பல்லிகள் இருக்கோ இல்லையோ... எலித் தொல்லைகள் ஓவரா இருக்காம் ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.

''அங்க யாரை பார்க்க போனீங்க...?'' என கேள்வி எழுப்பினார் அந்தோணிசாமி.

''நான் யாரையும் பார்க்க போகலை ஓய்... மதுரை மாநகராட்சி தி.மு.க., மண்டல தலைவர் குருசாமி, நில அபகரிப்பு, மிரட்டல், கொலை முயற்சின்னு, பல வழக்குகள்ல கைதாகி, பாளையங்கோட்டை சிறையில அடைபட்டு கிடக்கார்... குண்டர் சட்டம் வேற பாய்ஞ்சுடுத்து... நொந்துபோய், சிறையில படுத்துண்டு இருந்தவரை, எலி கடிச்சு குதறிடுத்து...

''மேலும் நொந்துபோன குருசாமி, எலி கடிக்கு தனியா சிகிச்சை எடுத்துண்டு இருக்கார் ஓய்...'' எனக் கூறிவிட்டு, குப்பண்ணா புறப்பட, மற்ற பெரியவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us