/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் கணவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் கணவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் கணவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் கணவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் கணவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 08, 2011 01:25 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் யூனியன் தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளரின்
கணவர், அமைச்சர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். இது,
அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பள்ளிபாளையம் யூனியன்,
காடச்சநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐந்துபனை கிராமத்தை சேர்ந்தவர்
மாதேஸ்வரன். அவர், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலாளராக பதவி வகித்து
வருகிறார். அவரது மனைவி ராணி, பள்ளிபாளையம் யூனியன், 13வது வார்டு ஒன்றிய
கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்பாளர் ராணியின்
கணவர் மாதேஸ்வரன், வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில்,
தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக தி.மு.க.,வில் கிளைக்கழக
செயலாளராக பதவி வகித்து வந்தேன். தற்போது, அக்கட்சியில் இருந்து விலகி,
அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். ஓரிரு தினங்களில் எனது மனைவியான, 13வது
வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளர் ராணி, தனது ஆதரவாளர்களுடன்,
அ.தி.மு.க.,வில் இணைய உள்ளார். இவ்வாறு கூறினார். தி.மு.க., வேட்பாளரின்
கணவர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமானது, அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.


