புதுச்சேரி : ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.சுதேசி மில் அருகே 5வது தூண் என்ற அமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு அமைப்பின் நிர்வாகி சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ., முன்னாள் தலைவர் விஸ்வேஸ்வரன், நிர்வாகிகள் விழுப்புரம் முகமது அமீது, கடலூர் சித்ரகலா மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.


