Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஞ்சு விலை உயர்வு: நூல் விற்பனை சலுகை ரத்து :நூற்பாலைகள் முடிவு

பஞ்சு விலை உயர்வு: நூல் விற்பனை சலுகை ரத்து :நூற்பாலைகள் முடிவு

பஞ்சு விலை உயர்வு: நூல் விற்பனை சலுகை ரத்து :நூற்பாலைகள் முடிவு

பஞ்சு விலை உயர்வு: நூல் விற்பனை சலுகை ரத்து :நூற்பாலைகள் முடிவு

ADDED : ஆக 23, 2011 11:28 PM


Google News
திருப்பூர் : பஞ்சு விலை மீண்டும் உயரத்துவங்கியுள்ளதால், நூல் விற்பனைக்கு அளிக்கப்பட்ட 15 முதல் 20 ரூபாய் வரையிலான சிறப்பு தள்ளுபடி நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பஞ்சுக்கு சரியான வரவேற்பு இல்லாததால், 70 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு விலை, 36 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. அதன் பின், மளமளவென நூல் விலையும் சரியத் துவங்கியது. கடந்த நான்கு மாதங்களில், கிலோவுக்கு 77 ரூபாய் அளவுக்கு விலை குறைந்தது. சாயத்தொழில் பிரச்னையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி 40 சதவீதம் குறைந்ததால், நூலுக்கான தேவையும் குறைந்தது. இதனால், தேங்கியுள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தால், கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டது. பருத்தி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு முற்றிலும் நீக்கிவிட்டதால், பஞ்சுக்கான தேவை அதிகரித்தது. அதன் காரணமாக, தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை 3,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் வாரங்களில் நூல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 20ம் நம்பர் நூல் விலை 164 ரூபாய்; 24ம் நம்பர் நூல் 173; 30ம் நம்பர் நூல் 184; 34ம் நம்பர் நூல் 191; 40ம் நம்பர் நூல் 198 ரூபாயாக உள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் முயற்சியாக, 15 முதல் 20 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டது. சாய ஆலைகள் இயங்கி, பனியன் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும்போது, நூலுக்கான தேவை அதிகரித்து, விலையும் சற்று உயர வாய்ப்பு இருந்தது. தற்போது பஞ்சு விலை 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், நூல் விலையை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு விற்பனை நடக்காத காரணத்தால், நூல் விலையை குறைக்காமல், சிறப்பு தள்ளுபடியாக அளிக்கப்பட்ட தொகை நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில்,'தொழில் மிகவும் மந்தமாக இருப்பதால், நூல் விலையை உயர்த்த முடியாது. ஏற்கனவே, கிலோவுக்கு 20 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்தோம். பஞ்சு விலை உயரத்துவங்கியுள்ளதால், நூல் விற்பனைக்கான சிறப்பு தள்ளுபடியை ரத்து செய்துள்ளோம். இதனால், உற்பத்தியாளர்கள் 12 முதல் 15 ரூபாய் அதிகமாக கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். நூலுக்கான தேவை அதிகரிக்கும்போது, விலையில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us