/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் நீராதாரங்கள் சுரண்டப்படுகின்றன :தோட்ட அதிபர் கூட்டத்தில் குற்றச்சாட்டுநீலகிரியில் நீராதாரங்கள் சுரண்டப்படுகின்றன :தோட்ட அதிபர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
நீலகிரியில் நீராதாரங்கள் சுரண்டப்படுகின்றன :தோட்ட அதிபர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
நீலகிரியில் நீராதாரங்கள் சுரண்டப்படுகின்றன :தோட்ட அதிபர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
நீலகிரியில் நீராதாரங்கள் சுரண்டப்படுகின்றன :தோட்ட அதிபர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : செப் 30, 2011 11:06 PM
குன்னூர் : 'நீலகிரியின் பல இடங்களில் நீராதாரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், சுத்தமான நீர் கிடைப்பதில்லை,' என நீலகிரி தோட்ட அதிபர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 120வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது. சங்க தலைவர் ஜித்தன் பரேக் பேசியதாவது:
தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள இடங்களில் இருந்து இயற்கை நீராதாரங்கள், தேயிலை தோட்டங்களுக்கு உதவியாக உள்ளன. நீலகிரியின் பல இடங்களில் நீராதாரங்கள் பொதுமக்களால் சுரண்டப்படுகின்றன; ஆக்கிரமிக்கப்படுகின்றன. அவற்றில் குப்பை, கூளங்கள் கொட்டப்படுவதால், சுத்தமான நீர் கிடைப்பதில்லை.
இத்தகைய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். தேயிலை எஸ்டேட் நிர்வாகங்களின் கணக்கு, வரவு, செலவு, வருமான வரி உட்பட விபரங்கள் காகிதம் மூலம் தயாரித்து சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படுவதால், அதிக நேர விரயம் ஏற்படுகிறது; பணியை எளிமையாக்க இத்தகைய பணிகளை கம்ப்யூட்டர்மயமாக்கி, 'இ-பேப்பர்' முறையை அறிமுகப்படுத்த வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தான் பெருமளவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன; எஸ்டேட் நிர்வாகங்கள் செலுத்தும் வரிதான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், தேயிலை தோட்டங்களுக்குள் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புக்கு தேவையான சாலை, நீர், தெருவிளக்கு, மருத்துவமனை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை. எஸ்டேட் நிர்வாகங்களே அத்தகைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் எஸ்டேட் தொழிலாளர்களுக்கென பிரத்யேகமாக படுக்கைகளை ஒதுக்க வேண்டும். கோத்தகிரி என்.பி.ஏ., பாலிடெக்னிக் பயிற்சி கூடத்திற்கு எஸ்டேட் தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிகம் பேர் சென்று வருகின்றனர். அவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும். தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டியுள்ளது. அவர்களின் நடத்தை, செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்பும் வகையில் உள்ளது என கூறப்படுகிறது. சில வட மாநில தொழிலாளர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளனர்; அவர்களின் குணநலன் குறித்து எதுவும் அறிந்து கொள்ள முடிவதில்லை. வட மாநில தொழிலாளர்களை போலீசார், தோட்ட தொழிற்சங்கத்தினர் தான் கண்காணிக்க வேண்டும். தேயிலை தொழிற்சாலைகளில் இயந்திரம் வாங்க, தேயிலை வாரியத்தின் தர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு, நிறுத்தப்பட்டுள்ள 25 சதவீத மானிய உதவியை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு, ஜித்தன் பரேக் பேசினார்.