ADDED : ஆக 17, 2011 12:41 AM
மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் வசித்து வந்த விவேகானந்தன், கிருஷ்ணவேணி தம்பதியரின் மூத்த மகள் வனிதா.
இவருக்கு சுந்தரவதனம், டாக்டர் வினோதகன், இன்ஜினியர் ஜெயராமன், திவாகரன் ஆகிய சகோதரர்களும், சசிகலா என்ற தங்கை என, 6 பேர் உடன் பிறந்தவர்கள். வனிதா, கணவர் விவேகானந்தன்(வனத்துறை அதிகாரி)வுடன் திருச்சி கருமண்டபத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தினகரன்,
பாஸ்கரன், சுதாகரன் ஆகிய 3 மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சர்க்கரை நோய் காரணமாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனிதா இறந்தார். அவரது உடலை இறுதி சடங்குக்காக, திருச்சியில் இருந்து மன்னார்குடியில் உள்ள அவரதுஇல்லத்துக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சசிகலா, சுதாகரன் உட்பட பலர் உடன் சென்றனர்.