பாரதிதாசன் பல்கலை சேர்க்கை தேதி நீட்டிப்பு
பாரதிதாசன் பல்கலை சேர்க்கை தேதி நீட்டிப்பு
பாரதிதாசன் பல்கலை சேர்க்கை தேதி நீட்டிப்பு
ADDED : செப் 04, 2011 03:36 AM
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை கல்வி மைய இயக்குனர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை கல்வி மையத்தில் நடந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான, கடைசி தேதி பருவமுறை படிப்புகளுக்கு வரும் 16ம் தேதி வரையிலும், அல்பருவ முறை பட்டயம், பட்டம் மற்றம் பட்டமேற்படிப்புகளுக்கு 30ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2011-12ம் கல்வியாண்டுக்கான இளம் கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பம் வழங்கும் தேதியும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இளம் கல்வியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவ ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 30ம் தேதிக்குள் தொலைக்கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


