"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி
"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி
"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி
ADDED : செப் 27, 2011 12:57 AM
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியனுக்கு, ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், இன்னொரு வழக்கில் கிடைக்காததால் சிறையிலேயே தொடர்ந்து இருக்கிறார்.
நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது, இரண்டு நிலமோசடி வழக்குகள், தனியார் 'டிவி' நிருபரை மிரட்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
'டிவி' நிருபரை மிரட்டிய வழக்கில், ஏற்கனவே ஜாமின் கிடைத்து விட்டது. கொம்பையா என்பவர் கொடுத்த நிலமோசடி புகாரில், ஜாமின் கேட்ட மனு, நேற்று செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும், சென்னை மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடும்படி நிபந்தனை விதித்து, நீதிபதி விஜயராகவன் ஜாமின் வழங்கினார். இருப்பினும், அசோக் பாண்டியன் என்பவர் கொடுத்த நிலமோசடி வழக்கில், இன்னமும் ஜாமின் கிடைக்காததால், அவர் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலேயே இருக்கிறார்.