ADDED : ஜூலை 17, 2011 02:07 AM
நாமக்கல்: நாமக்கல் கிங் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில், முதலாமாண்டு
வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவனத் தலைவர் இளங்கோ தலைமை
வகித்தார்.
தாளாளர் கலா இளங்கோ குத்துவிளக்கேற்றி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவியர், படிப்பில் அதிக கவனம்
செலுத்தி படிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என,
அறிவுறுத்தப்பட்டது.கல்லூரி முதல்வர் முத்து, துணை முதல்வர் குணசேகரன்
உட்பட பலர் பங்கேற்றனர்.