ADDED : செப் 21, 2011 09:48 PM
மரக்காணம்:மரக்காணம் அ.தி.மு. க., முன்னாள் நகர செயலளாருக்கு தேர்தலில்
சீட் வழங்காததை கண்டித்து ஊர்வலம் நடந்தது.மரக்காணம் பேரூராட்சி தலைவர்
பதவிக்கு நகர செயலளார் கணேசன், மீன வரணி மாவட்ட செயலா ளர் ஜெயராமன்,
முன்னாள் நகர செயலாளர் சேகர் ஆகியோர் கட்சியில் சீட் கேட்டு மனு
கொடுத்தனர்.
இவர்களில் மீனவரணி ஜெயராமனை வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது. தொடர்ந்து
கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுவரும் முன்னாள் நகர செயலாளர் சேகருக்கு
சீட் வழங்காததை கண்டித்து நேற்று முன்தினம் மாலை அவரது ஆதரவாளர்கள்
மரக்காணத்தில் ஊர்வலம் நடத்தினார்.மேலும் கட்சித் தலைமையிடம் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி புகார் செய்ய உள்ளதாக சேகர் மற்றும் அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.