கொல்லுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை மூன்று பேர் சரண்; 4 பேரிடம் விசாரணை
கொல்லுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை மூன்று பேர் சரண்; 4 பேரிடம் விசாரணை
கொல்லுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை மூன்று பேர் சரண்; 4 பேரிடம் விசாரணை
UPDATED : ஜூலை 12, 2011 05:51 PM
ADDED : ஜூலை 12, 2011 12:29 AM
திருவாரூர் : கொல்லுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் நேற்று நாகை கோர்ட்டில் சரணடைந்தனர்.
மேலும் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கொலுமாங்குடி அருகே செல்போன் திருட்டு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாமிநாதன் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய ஆதரவாளர்கள் கடைகளுக்கு தீ வைப்பு, அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு நாகை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றும், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. கொலை குறித்து, சாமிநாதன் அண்ணன் பக்கிரிசாமி கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப் பதிந்து, பன்னீர்செல்வம் அவரது மகன்கள் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் அன்னதானபுரம் சித்திரைச்செல்வம் (42), கொலுமாங்குடி கார்த்திக் (24), வல்லங்குடி இளஞ்செழியன் (24) ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேரளம், கொலுமாங்குடி பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.