ADDED : ஜூலை 26, 2011 10:42 PM
விருத்தாசலம் : பூதாமூரில் நெல் விதை உற்பத்திக்கான விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
வீரா சீட்ஸ் நிறுவனம் மற்றும் விதை சான்றளிப்பு துறை இணைந்து நடத்திய முகாமிற்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சுப்ரமணியம் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். வீரா சீட்ஸ் நிர்வாக இயக்குனர் சாமிநாதன் வரவேற்றார். விதைச் சான்று நடைமுறைகள் குறித்தும், விதை ஆய்வு, பரிசோதனை நடைமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. விதைச் சான்று அலுவலர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், விதை ஆய்வாளர் சீனுவாசன், பரிசோதனை அலுவலர் நடனசபாபதி விவசாயிகளுக்கு விளக்கினர். தொழில் நுட்பங்கள் குறித்து கடலூர் விதைச் சான்று உதவி இயக்குனர் அரிதாஸ் விளக்கினார். முகாமில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


