ADDED : செப் 20, 2011 09:34 PM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் வ.உ.சி., நற்பணி மன்றத்தின் ஆண்டு விழா நடந்தது.
பிள்ளைமார் பேரவை மாநில அமைப்பாளர் முருகதாசன் தலைமை வகித்தார்.
நற்பணி
மன்ற தலைவர் அழகு வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை டாக்டர்
ராஜாராம் வழங்கினார். முதியோர்களுக்கு இலவச சேலைகளை வ.உ.சி., கல்வி
அறக்கட்டளை செயலாளர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். திருவள்ளுவர் மன்ற
தலைவர் முத்தரசு, சமூக நிர்வாகிகள் ராமர், சுப்பையா உள்பட பலர் பேசினர்.
ஆசிரியர் சுப்பையா நன்றி கூறினார்.