ADDED : ஆக 02, 2011 11:23 PM
காரைக்குடி : காரைக்குடியில் தினசரி மூன்று காட்சிகளாக 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பெண்களின் வீர சாகசங்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக, யானை 'சிவபூஜை' செய்வதும், கிரிக்கெட் விளையாடுவதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. மீன்களை விழுங்கி, அதை உயிருடன் வெளியே எடுக்கும் காட்சி, கேரள அழகியின் 'ரிங் டான்ஸ்', கூண்டுக்குள் 'பைக்' ஓட்டுவது, அரை அடி உயரமுள்ள மூன்று கத்திகளை ஒரே நேரத்தில் விழுங்குவது, காலால் உதைத்து கூடையில் பந்து போடுவது உள்ளிட்ட எண்ணற்ற சாகசங்கள் நிறைந்துள்ளன. தினசரி மதியம், 1மணி, 4 மணி, 7 மணி என மூன்று காட்சிகள் நடக்கின்றன. சலுகை கட்டணத்தில் சர்க்கஸ் காண விரும்பும் கல்வி நிறுவனங்கள் 98943 54763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆக., 8ம் தேதி வரை சர்க்கஸ் நடக்கிறது.