விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்
விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்
விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்
ADDED : ஆக 23, 2011 05:07 AM
சென்னை:விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன. இதையடுத்து, சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மங்களூரூவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில்களுக்கான முன்பதிவு, நாளை (24ம் தேதி) முதல் துவங்குகிறது.மேற்கண்ட தகவலை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.