வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு
ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
வேளாங்கண்ணி - தாதர்
சிறப்பு ரயில்(06802), செப்., 8ம் தேதி (வியாழன்) இரவு, 8.30 மணிக்கு
புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலை, காட்பாடி, ரேணிகுண்டா,
குண்டக்கல், வாடி வழியாக மும்பை, தாதர் ரயில் நிலையத்திற்கு செப்., 10ம்
தேதி பகல் 12 மணியளவில் சென்றடையும். மும்பை, தாதர் - சென்னை சென்ட்ரல்
சிறப்பு ரயில் (06801), தாதரில் செப்., 10ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல்
3.45 புறப்பட்டு, மறுநாள் 11ம் தேதி இரவு 8.55 மணிக்கு சென்ட்ரல் ரயில்
நிலையம் வந்து சேரும். இதற்கான முன்பதிவு, நாளை (19ம் தேதி) முதல்
துவங்குகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


