/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ரூ.5 லட்சம் வரை மானிய கடன் வழங்க ரெடிதூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே உஷாராகுங்கள்ரூ.5 லட்சம் வரை மானிய கடன் வழங்க ரெடிதூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே உஷாராகுங்கள்
ரூ.5 லட்சம் வரை மானிய கடன் வழங்க ரெடிதூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே உஷாராகுங்கள்
ரூ.5 லட்சம் வரை மானிய கடன் வழங்க ரெடிதூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே உஷாராகுங்கள்
ரூ.5 லட்சம் வரை மானிய கடன் வழங்க ரெடிதூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே உஷாராகுங்கள்
ADDED : செப் 21, 2011 01:11 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
உருவாக்கும் வகையில் 5 லட்ச ரூபாய் வரை மானியத்துடன் தொழில் செய்ய கடன்
வழங்க மாவட்ட தொழில் மையம் தயாராக உள்ளது. உடனடியாக இதற்கு இளைஞர்கள் இதனை
பெற விண்ணப்பம் செய்யுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலெக்டர் ஆஷீஷ்குமார்
ஆலோசனைப்படி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அரங்கண்ணல் தலைமையில் திட்ட
மேலாளர் பாக்யம், பொறியாளர்கள் ஸ்வர்ணலதா, முருகேஷ் மற்றும் அலுவலர்கள்
இதற்கான பணிகளில் ஈடுபட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை வரவழைத்து
தொ ழில் செய்வதற்குரிய ஆலோசனைகள் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து
விளக்கி வருகின்றனர்.இந் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும்
அதிகமான இளைஞர்களுக்கு மானியக் கடன் வழங்கி தொழில் செய்ய ஏற்பாடு
செய்யுமாறு மாவட்ட தொழில் மைய த்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இத னை
தொடர்ந்து இது சம்பந்தமான பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவ ட்ட தொழில் மைய பொது மேலாளர் அரங்கண்ணல்
விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழகத்தில் 11வது ஐந்தாண்டு
திட்ட காலத்தில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் உயரிய
நோக்கில் வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்
உன்னத திட்டம் ஒன்று தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
இந்த திட்டம் சமூகத்தில்,
பொருளாதாரத்தில் பின்தங்கியோரையும், படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல்
இருப்பவரையும், முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் வகையில் 15 சதவீத
மானியத்துடன் உற்பத்தி, சேவை, வியாபார நிறுவனங்களுக்கு முறையே 5 லட்சம், 3
லட்சம், ஒரு லட்சம் திட்ட மதிப்பீட்டில் பாங்குகள் மூலம் கடனுதவி பெற்று
சுயவேலைவாய்ப்பு பெற்றவராக உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.மாவட்ட
அளவில் மாவட்ட தொழில்மையம் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். வயது
உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதும், சிறப்பு பிரிவினருக்கு
(தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர்,
மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள்) 45 வயதுக்குள் இருக்க
வேண்டும்.குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும். பயனாளிகள் ஆண்டு குடும்ப வருமானம் அவருடைய கணவன், மனைவியின்
வருமானத்துடன் சேர்த்து ஆண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல்
இருக்க வேண்டும். வருமானச்சான்று நோட்ரிக் பப்ளிக் மூலம் பெறப்பட
வேண்டும்.
வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சமும்,
சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு
அதிகப்பட்சமாக 5 லட்சம் வரை பாங்குகள் மூலம் கடன் வசதி பெற வாய்ப்பு
உள்ளது.
திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் பொது பிரிவினர், சிறப்பு பிரிவினர் 5
சதவீதம் பயனாளிகள் சொந்த முதலீடு செய்ய வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 15
சதவீதம் மானியமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்.பொருளாதார முன்னேற்றத்துடன்
தொடர்புடைய அனைத்து உற்பத்தி, சேவை, வியாபார பிரிவு தொழில்கள். (நேரடி
விவசாய தொழில்கள், பயிரிடுதல், விதைகள் நீங்கலாக)விண்ணப்பதாரர்கள் தங்களது
விண்ணப்பங்கள் மற்றும் தொழில் திட்ட அறிக்கைகள் வயது, கல்வித்தகுதி,
இருப்பிடச்சான்றிதழ், இனம், ஜாதி, முன்னாள் ராணுவத்தினர் தேவைப்படின்
மற்றும் மாற்றுதிறனாளிகள் என்பதற்கான உரிய சான்றிதழ்கள் இணைத்து
பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் சிக்னல் அருகில், கோரம்பள்ளம்,
தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேல் விபரங்களுக்கு
0461-2340152, 2340053 என்ற டெலிபோன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.தற்போது
மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் எல்லா வேலை நாட்களிலும் இந்த
திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதால் படித்துவிட்டு,
வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இந்த திட்டத்தில் நிதியுதவி
பெற்று சுய தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.