நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதி, அக்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.
சதுர்வேதி மங்கலத்தின் சுருக்கம் மங்கலம். பக்தி இலக்கிய காலகட்டத்தில் 'திரு' எனும் அடைமொழி பரவலாக வழங்கப்பட்டது. எனவே, இடைக்காலத்தில் திருமங்கலம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.