Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வேகத்தடை அமைக்க இடங்கள் ஆய்வு

வேகத்தடை அமைக்க இடங்கள் ஆய்வு

வேகத்தடை அமைக்க இடங்கள் ஆய்வு

வேகத்தடை அமைக்க இடங்கள் ஆய்வு

ADDED : ஜூலை 13, 2011 02:05 AM


Google News
பல்லடம் : பல்லடம் சப்-டிவிசனில் விபத்துகளை தடுக்க, புதிதாக வேகத்தடை அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.பல்லடம் சப்-டிவிசனில் பல்லடம், அவினாசிபாளையம், மங்கலம், காமநாயக்கன்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. வாகன போக்குவரத்து மிகுந்த இப்பகுதிகளில், போக்குவரத்தை சீரமைக்க போதிய அளவில் போலீசார் இல்லை.சாலை விதிமுறையை முறையாக கடைபிடிக்காமல் மெத்தனமாக வாகனம் ஓட்டுவோர் அதிகமாக காணப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்லடம் பகுதியில் நடந்த சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 என தெரியவந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள், டிரைவர்களின் அஜாக்கிரதை, குடிபோதை மற்றும் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுதல், முக்கியமான இடங்களில் வேகத்தடை இன்மை போன்ற காரணங்களால் அதிக அளவில் நடப்பது போலீசாரின் தொடர் ஆய்வில் தெரியவந்துள்ளது.இக்குறைபாடுகளை களைய, திருச்சி

ரோடு, கோவை ரோடு, பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அவ்வப்போது வாகன சோதனை செய்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரை அடையாளம் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.விபத்துகளை தடுக்கும் வகையில், பல்லடம் சப்-டிவிசனில் எந்தெந்த இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்க வேண்டியுள்ளது என்பது குறித்தும் சப்- டிவிசன் போலீசார் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண இந்திய முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

திருப்பூர் : 'திருப்பூரில் நிலவி வரும் சாய ஆலை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழக முதல்வருக்கு, இந்திய முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் ஹம்சா கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூரில் செழிப்புடன் வளர்ந்து வந்த பனியன் தொழில் செயல் இழந்து வருவதால், நகரம் களையிழந்து வருகிறது. எனவே, சாய ஆலை பிரச்னைக்கு காலதாமதம் இன்றி தீர்வு காண வேண்டும். கடுமையான நூல் விலை உயர்வு, மின் தடையால் பனியன் உற்பத்தியாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்; பல பனியன் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. சாய ஆலை பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில், அதிக விலையில் நூல் பெற்று பனியன் துணி உற்பத்தி செய்து வைத்திருந்தனர். சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதால், துணியை டையிங்கிற்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். நூல் விலை குறைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். பனியன் தொழில் சார்ந்த உபதொழில்களும் முடங்கி உள்ளதோடு நூல் விற் பனை இல்லாததால் நூல் மில்களிலும் பணி முடக்கம் செய்யபட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, திருப்பூரில் இருந்து குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. சாயக்கழிவு நீரால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கால அளவு நிர்ணயம் செய்து கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைத்து நிறைவேற்ற வேண்டும். அதுவரை, குறைந்த அளவுள்ள சாயக்கழிவு நீரை வெளியேற்றுவதற்கு அனுமதி பெற்று, முடங்கிக் கிடக்கும் பனியன் தொழில் மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும், என, கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us