/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைதுதபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது
தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது
தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது
தபால் நிலையம் முற்றுகை மாதர் சங்கத்தினர் 68 பேர் கைது
ADDED : செப் 17, 2011 01:01 AM
கடலூர் : விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் 68 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் உலகமயக் கொள்கையால் அத்தியாவசதிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலை ரத்து செய்து, முழுமையான பட்டியலை தயாரிக்க வேண்டும்.பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
ரேஷன் அரிசிக்கு பதிலாக பணமாக தருவது என்ற முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தபால் நிலையம் முற்றுகைபோராட்டம் நடந்தது. ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜான்சிராணி தலைமையில் 68 பேர் நேற்று மதியம் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாகச் சென்று மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அவர்களை டி.எஸ்.பி., வனிதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.