பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
பல்லடம் : பல்லடம் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பட்டா மாறுதல் மனுவை வாரம்தோறும் திங்கள்கிழமை அந்தந்த கிராமத்திலும், செவ்வாய்கிழமை கூடுதல் பொறுப்பு கிராமத்திலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிக்கலாம்.
பட்டா மாறுதல் மனுக்களுடன், மாறுதல் கோரும் சொத்து தொடர்பான கிரையப்பத்திரத்தின் ஜெராக்ஸ் இணைப்பது அவசியம். உடனடியாக தீர்வு காணப்படும் இச்சிறப்பு திட்டம், பல்லடம் தாலுகாவில் கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று துவக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, தாசில்தார் ஜீவா, கரைப்புதூர் ஊராட்சி தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.தாசில்தார் கூறியதாவது: பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் வாரந்தோறும் திங்கள்கிழமை பெறப்படும். உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல்களுக்கு, மனு கொடுத்த நாளில் இருந்து இரண்டாவது வெள்ளிக்கிழமை. உட்பிரிவு செய்ய வேண்டிய மனுக்களுக்கு மனு கொடுத்த நாளில் இருந்து நான்காவது வெள்ளிகிழமைகளில் தாலுகா அலுவலகத்தில் மூல ஆவணங்களை கொண்டு வந்து ஆய்வுக்குப்பின் உட்பிரிவிற்கான கட்டணத்தை செலுத்தி, பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம், என்றார்.