/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பனியன் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் : பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்பனியன் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் : பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்
பனியன் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் : பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்
பனியன் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் : பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்
பனியன் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் : பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2011 02:07 AM
திருப்பூர் : 'சாய ஆலைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக 5,000 ரூபாயை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்,' என, பாரதிய மஸ்தூர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாரதிய மஸ்தூர் சங்க தேசிய செயலாளர் துரைராஜ், திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாரதிய மஸ்தூர் சங்கம் ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி உதய தின விழா கொண்டாடுகிறது. பெட்ரோலிய பொருள் வரி மூலம் 44 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக பார்லிமென்ட் குழு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த சி.ஐ.எல்., நிறுவனம், 2010-11ம் ஆண்டில் 6334.40 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இது நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே ஈடுபட்டுள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனம் லாபம் ஈட்டும் நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் லாபம் ஈட்டி வருகின்றன. 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 220 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மற்ற நாடுகளில் பல மடங்கு விலை குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பெட்ரோலியப்பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது. 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் பெரும் முதலாளிகளுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கு மற்றும் மானியம் வழங்கியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் 46 கோடி பேர் உள்ள நிலையில், பல போராட்டங்களுக்கு பிறகே ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. பத்து கோடி பேர் ஈடுபட்டுள்ள ஜவுளித் தொழிலில் பஞ்சு உற்பத்தி முதல் நூல், துணி, நிட்டிங் என பல கட்டங்களிலும் சிறு முதலாளிகள், தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். முழுமையாக ஆய்வு செய்து, ஜவுளிக் கொள்கை வகுக்க வேண்டும். யூக வணிகத்தால், அனைவரும் பாதிக்கின்றனர். அனைத்து தொழில்களிலும் யூக வணிகத்தை தடை செய்ய வேண்டும். சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, ரூ.750 கோடி செலவிட்டால் போதும். பெரும் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மான்யம் வழங்கும் அரசு, திருப்பூர் தொழிலுக்கு 750 கோடி ரூபாய் செலவிடுவது பெரிய விஷயம் இல்லை. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரிலுள்ள தொழிலாளர்களுக்கு பி.எப்., உள்ளிட்ட எவ்விதமான சலுகைகளும் இல்லை. சாய தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், ஆறு மாதமாக பனியன் தொழில் முடங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, பனியன் தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் 5,000 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, பி.எம்.எஸ்., தேசிய செயலாளர் துரைராஜ் தெரிவித்தார்.


