ரயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது
ரயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது
ரயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது
ADDED : ஜூலை 14, 2011 09:41 PM
திருப்பூர் : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில்
ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து,
மத்திய அமைச்சர் சிதம்பரத்தை பதவி விலக வலியுறுத்தியும், தீவிரவாதத்தை
கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்
அருகில், இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்தும், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க
வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.மாநில துணை தலைவர் பாலாஜி தலைமை
வகித்தார்; மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட
எட்டு பேர், கோஷம் எழுப்பியபடி, ரயில் மறியல் செய்வதற்காக ரயில்வே ஸ்டேஷன்
பகுதியை நோக்கி சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பூர் வடக்கு
போலீசார் கைது செய்தனர்.


