/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி கூட்டம்பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி கூட்டம்
பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி கூட்டம்
பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி கூட்டம்
பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி கூட்டம்
ADDED : ஜூலை 11, 2011 11:38 PM
புதுச்சேரி : அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இளைஞர் அணி சார்பில் அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டம் நடந்தது.
இளைஞரணி துணைத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இளைஞர் அணி பொதுச்செயலாளர் மாறன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் சுதாகர், கொம்யூன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரியாங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தந்தை பெரியார் பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, அருந்ததிபுரம் நடுநிலைப்பள்ளி, வீராம்பட்டினம் சிங்காரவேலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து இப்பகுதியில் இயங்கி வரும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இதற்காக வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.