Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மத்திய அரபை கண்டித்து 19ம்தேதி உண்ணாவிரதம்: பழங்குடியினர் முடிவு

மத்திய அரபை கண்டித்து 19ம்தேதி உண்ணாவிரதம்: பழங்குடியினர் முடிவு

மத்திய அரபை கண்டித்து 19ம்தேதி உண்ணாவிரதம்: பழங்குடியினர் முடிவு

மத்திய அரபை கண்டித்து 19ம்தேதி உண்ணாவிரதம்: பழங்குடியினர் முடிவு

ADDED : ஆக 14, 2011 02:48 AM


Google News
புதுச்சேரி : சாதி வாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் தவறான போக்கை கண்டித்து வரும் 19ம் தேதி உண்ணாவிரதம் இருக்க பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இது குறித்து கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டில் முதன் முறையாக தற்போது தான் அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறது. மேலும், புதுச்சேரியில் இருளர், காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய பழங்குடி மக்களை 2000ம் ஆண்டில் அரசு ஆய்வு செய்தது.

அதனடிப்படையில் புதுச்சேரி காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பூர்விகமாக இருளர், காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா போன்ற பழங்குடியினர் வாழ்வதாக அறிவித்ததன் அடிப்படையில் அரசு இவர்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என கடந்த 12.4.2010ல் அறிவித்து, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களில் 1 சதவீதம் தனி இடஒதுக்கீடு அளித்துள்ளது.எனவே, தற்சமயம் 2011ம் ஆண்டு பாதிவாரியான கணக்கெடுப்பில் மேற்கூறிய இனங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அரசு பணி நிமித்தமாக அண்டை மாநிலங்களிலிருந்து புதுச்சேரி அரசால் பணி வழங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் 152 பழங்குடி நபர்களையும், அவர்களின் குடும்பத்தையும் மத்திய அரசின் சாதிவாரியான கணக்கெடுப்பில் ஷெட்யூல்டு டிரைப் என பதிவு செய்ய வேண்டும்.இதுகுறித்து பம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளித்தும் எங்களை பழங்குடியினர் என பதிவு செய்யாமல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே மத்திய அரசின் தவறான போக்கை கண்டித்து 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us