/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருக்காஞ்சியில் படுகை அணை : தேனீ ஜெயக்குமார் கோரிக்கைதிருக்காஞ்சியில் படுகை அணை : தேனீ ஜெயக்குமார் கோரிக்கை
திருக்காஞ்சியில் படுகை அணை : தேனீ ஜெயக்குமார் கோரிக்கை
திருக்காஞ்சியில் படுகை அணை : தேனீ ஜெயக்குமார் கோரிக்கை
திருக்காஞ்சியில் படுகை அணை : தேனீ ஜெயக்குமார் கோரிக்கை
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : 'திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் படுகை அணை கட்ட வேண்டும்' என, தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், தேனீ ஜெயக்குமார் எழுப்பிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. தேனீ ஜெயக்குமார்: ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து திருக்காஞ்சி, அக்ரஹாரம் பகுதிகளை இணைக்கும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சாலை போக்குவரத்துக்கும், உப்பு நீரை தடுப்பதற்கும் படுகை அணை கட்டும் உத்தேசம் உள்ளதா? முதல்வர் ரங்கசாமி: படுகை அணை கட்டுவதற்கு உத்தேசமில்லை. அங்கே சாலை போக்குவரத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, நபார்டு வங்கியின் மூலம் நிதி பெற்று, பணிகள் மேற்கொள்ளப்படும். தேனீ ஜெயக்குமார்: அங்குள்ள ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து, சுடுகாடு இல்லாமல் செய்து விட்டனர். பிணத்தை படகில் எடுத்து செல்லும் அவலம் உள்ளது. இது நீண்ட கால பிரச்னை. முதல்வர் ரங்கசாமி: ஆற்றின் குறுக்கே பாலம் இந்தாண்டு கட்டப்படும். தேவைப்பட்டால் படுகை அணையும் கட்டலாம். தேனீ ஜெயக்குமார்: உறுவையாறு பாலம் போல இங்கேயும் படுகை அணை அமைக்கலாம். அனைத்து கிராம மக்களுக்கும் பயன்படும். முதல்வர் ரங்கசாமி: திட்டத்தை விரைவில் தயாரித்து பணிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.