/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணிகல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஓசூர் : ஓசூரில் போலீஸார் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ராயக்கோட்டை சாலையில் உள்ள அமேரியா பெட்ரோல் பங்க் அருகே விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பேரணியை ஓசூர் ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் (பொ) சரவணன் முன்னிலை வகித்தார். கூடுதல் எஸ்.பி., செந்தில்குமார் பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்தும், கோஷங்கள் எழுப்பியும் ஈவ் டீசிங், ராக்கிங் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
பேரணி ராயக்கோட்டை சாலை, காமராஜ் காலனி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் அதியமான் இன்ஜினிரிங் கல்லூரி, கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக், ஓசூர் செயின்ட் ஜோசப் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


