/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2011 01:15 AM
தென்காசி : தென்காசியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்த வேண்டும் என கோரி தென்காசி வேன் ஸ்டாண்டில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முத்துசாமி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிரகாஷ், மைதீன், கணேசன் முன்னிலை வகித்தனர்.
ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இசக்கிராஜன், முத்தையா, முத்துவேல், ஜீவா, செல்லப்பெருமாள், ஆதிமுருகன், திருவிலஞ்சிகுமரன், செல்வன், கார்த்திக், கணேஷ்குமார், செந்தில், கண்ணன், முருகன், குமார் மற்றும் பலர் பேசினர். பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துசாமி நன்றி கூறினார்.


