/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை ரோட்டரி சங்கம் இடிந்த வீட்டுக்கு உதவிகுடந்தை ரோட்டரி சங்கம் இடிந்த வீட்டுக்கு உதவி
குடந்தை ரோட்டரி சங்கம் இடிந்த வீட்டுக்கு உதவி
குடந்தை ரோட்டரி சங்கம் இடிந்த வீட்டுக்கு உதவி
குடந்தை ரோட்டரி சங்கம் இடிந்த வீட்டுக்கு உதவி
ADDED : செப் 19, 2011 12:36 AM
கும்பகோணம்: கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மேற்கூரை இடிந்த விழுந்து
பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு
முன் பெய்த கடும் மழையினால் கும்பகோணம் அருகே புள்ளபூதங்குடி கிராமத்தில்
வசிக்கும் பாலையன் என்பவரின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து
விழுந்தது. இதன் காரணமாக அங்கே தூங்கிக்கொண்டிருந்த பாலையன் மனைவி, மகன்,
பேரக்குழந்தைகள் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. அவர்களுக்கு உதவ கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில்
முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணம் ரோட்டரி சங்கத் தலைவர் பாலாஜி,
செயலர் முகம்மது ஜஃபையர், பொருளாளர் கிருஷ்ணன், மூத்த உறுப்பினர் முத்தையா,
திருப்பிறமியம் கிராம சமுதாய குழுமத்தில் தலைவர் சுலோச்சனா முன்னிலையில்
பாதிக்கப்பட்ட பாலையனுக்கும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து சமையல்
பாத்திரங்கள் மற்றும் துணி, மற்றும் அத்வாசிய பொருட்களை வழங்கினார்கள்.