ADDED : செப் 20, 2011 10:21 PM
தேனி:ஆண்டிபட்டி நலம் இணைப்பு மையம் சார்பில் எஸ்.கே.ஏ., மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் இலவச சர்க்கரை நோய்க்கான பாத பராமரிப்பு முகாம்
நடந்தது. சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.94
பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. 31 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது
கண்டறியப்பட்டது.
நலம் இணைப்பு மையம் சார்பில் கடந்த ஆண்டில் 533 பேருக்கு புதிதாக சர்க்கரை
நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2,259 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
15 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 1,675 பேர் பயனடைந்துள்ளனர் என டாக்டர் ராஜ்குமார் தெரிவித்தார்.