/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரக்காணம்- முருக்கேரி சாலையில் வழிப்பறி இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்மரக்காணம்- முருக்கேரி சாலையில் வழிப்பறி இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்
மரக்காணம்- முருக்கேரி சாலையில் வழிப்பறி இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்
மரக்காணம்- முருக்கேரி சாலையில் வழிப்பறி இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்
மரக்காணம்- முருக்கேரி சாலையில் வழிப்பறி இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்
மரக்காணம் : மரக்காணம்- முருக்கேரி சாலையில் இரவு நேரங்களில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து அப்போதைய எஸ்.பி., அதிரடி நடவடிக்கையால் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வழிப்பறி சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. கடந்த சில மாதங்க ளாக மரக்காணம்- திண்டிவனம் சாலையில் உள்ள கொள்ளுமேடு, குரும்புரம், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின் தொடர்ந்து வந்து வழி மறித்து நகை, மொபைல் போன், பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் அபகரித்துச் செல்கின்றனர். இச்சம்பவங்கள் குறித்து மரக்காணம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் இரவு 8 மணிக்குமேல் இந்த வழியே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரத் தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப் படுத்த முன் வர வேண்டும்.